ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2–1 என பாகிஸ்தானை வீழ்த்தியது.
சீனாவின் ஹீலுன்பியுரில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 8வது சீசன் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு போட்டியில் சீனா, ஐப்பான், மலேசியா, தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.
இதற்கு 13, 19-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்திய கேப்டன் ஹர்மனபிரீத் சிங் 2 கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது.
நேற்று இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. கடைசி 10 நிமிடம் மீதமிருந்த போது இந்தியாவின் கோல் எல்லை பகுதிக்குள் பாகிஸ்தானின் அஷ்ரப் வாஹித் ராணா, இந்தியாவின் ஜக்ராஜ் சிங் மோதிக்கொண்டனர்.
இதில் ஜக்ராஜ் சிங் கீழே விழுந்ததில் லேசாக காயம் அடைந்தார். அப்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஐர்மன்பிரீத் சிங், பாகிஸ்தான் வீரர் ராணாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட பதட்டம் ஏற்பட்டது.
உடனடியாக அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இச்சம்பவம் குறித்து டிவி அம்பயரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. இதில் ராணாவின் தவறு உறுதியானதால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணி கடைசி 10 நிமிடம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
0
Leave a Reply